‘முதலா ஏன தம்பெயர் முதலு’தல்

உயிரொடு சேர்ந்து மொழிக்கு முதலாகும் என்று குறிப்பிடப் பட்டனஅல்லாத, மொழிக்கு முதலாகாத மெய்களும் தம்மைக் குறிப்பிடுமிடத்துமொழிக்கு முதலில் வரும். மொழிக்கு முதலாகாத மெய்கள் ங் ட் ண்ர் ல் ழ்ள் ற் ன் – என்ற ஒன்பதும் ஆம்.வருமாறு: ‘லனஎன வரூஉம் புள்ளி முன்னர்’ (தொ.எ. 149 நச்.);‘டகாரம் ஆகும்’(எ. 302); ‘ணகார இறுதி (எ. 302); ‘னகார இறுதி’ – (எ.332); ‘ளகார இறுதி’ (எ. 396) ‘ரகார ழகாரமாய்’ (எ. 95 நச்.); ‘றஃகான்னஃகான்’ (எ. 66, 94)