எ-டு : ‘மறைநுவல் கங்கை தாங்கினார்நிறைதவ மங்கை காந்தனார்குறைஎன அண்டர் வேண்டவேமறைநுவல் கங்கை தாங்கினார்.’கங்கை – தேவகங்கையாம் ஆறு; கம் – தலை.நிறைந்த தவத்தையுடைய பார்வதியின் துணைவராம் சிவபெருமான் வேதங்கள்புகழும் கங்கையைச் சடையிலே தாங்கினார்; உதவிவேண்டித் தேவர்கள்வேண்டவே, இரகசி யங்களைப் பிறர்க்கு உபதேசித்த பிரமனுடைய தலையை (-பிரமகபாலத்தை)த் தம் கையின்கண் தாங்கினார் – என்ற பொருளமைந்த இப்பாடற்கண்,முதலாம் நான்காம் அடிகள் மடக்கியவாறு. (தண்டி. 96 உரை.)