நான்கடிச் செய்யுளுள் முதலடி முதல் இருசீர்கள் மடக்கி வரத்தொடுப்பது.எ-டு : ‘துறைவா துறைவார் பொழில்துணைவர் நீங்கஉறைவார்க்கும் உண்டாங்கொல், சேவல் – சிறைவாங்கிப்பேடைக் குரு(கு) ஆரப் புல்லும் பிறங்கிருள்வாய்வாடைக்(கு) உருகா மனம்?’“நெய்தல் நிலத் தலைவ! துறைக்கண் நேரிதாக அமைந்த பொழிலிடத்துத்துணைவர் பிரிதலாலே, சேவல் தன் பெடையைச் சிறகுகளால் ஆரப் புல்லும்இருளிடத்து, வாடைக்கு உருகாத மனம் அப் பிரியப்பட்ட மகளிருக்கும்உண்டோ?” என்று பொருள்படும் இப்பாடற்கண், முதலடி யில் ‘துறைவா’ என்றமுதற்சீர் மடங்கி வந்தவாறு. (தண்டி. 95 உரை.)