இஃது ஈற்றடி ஒழிந்த மூவடி ஆதிமடக்கு எனவும்படும்.எ-டு : ‘இறைவா இறைவால் வளைகாத்(து) இருந்துயார்உறைவார் உறைவார் புயலால் – நறைவாய்ந்தவண்டளவு வண்டளவு நாளின் மயிலாலக்கண்டளவில் நீர்பொழியும் கண்.’இறைவா, இறை வால் வளை; உறைவார் உறை வார் புயலால்; வண்தளவு, வண்டுஅளவு – எனப் பிரித்துப் பொருள் செய்க.“தலைவ! நீர்த்துளி மிக்க கார்மேகத்தால் தேன் பொருந்திய வளமானமுல்லைகளில் வண்டுகள் மொய்க்கும் கார்ப்பருவ நாள்களில் மயில்கள்ஆடுதலைக் கண்ட அவ்வளவில் கண்கள் கண்ணீரைச் சொரியும். முன்கையிலுள்ளவெள்ளிய வளையல்களைக் கழலாமல் அக்காலத்தில் பாதுகாத்துக் கொண்டிருந்துயாவர் உயிர் வாழ்தல் கூடும்?” என்று தோழி கார்ப்பருவத்தே தலைவிநிலையைக் கூறித் தலைவன் பிரிவு விலக்கிய இப்பாடற்கண், முதல்மூன்றடியும் முதலில் மடக்கியவாறு. (தண்டி. 95 உரை.)