இது மூன்றாமடியொழிந்த மூவடி ஆதிமடக்கு எனவும்படும்.எ-டு : ‘மலையு மலையு மகிழ்ந்துறையும் வேயும்கலையும் கலையும் கடவும் – தொலைவில்அமரில் எமக்கரணாம் என்னுமவர் முன்னிற்குமரி குமரிமேற் கொண்டு.’குமரி, மலையும் அலையும் மகிழ்ந்து உறையும்; கலையும் வேயும்;கலையும் கடவும்; அரணாம் என்னுமவர்க்கு அரிமேல் கொண்டு முன் நிற்கும்என்று பிரித்துப் பொருள் செய்யப்படும்.குமரியாகிய கொற்றவை, மலையையும் கடலையும் தனக்கு இருப்பிடமாகக்கொண்டு, பிறைச்சந்திரனை வேய்ந்து, ஆண்மானை வாகனமாகக் கொண்டுவிளங்குவாள்; அழிவற்ற போரில் தமக்குப் பாதுகாவலாக வேண்டும் என்றுஇறைஞ்சுபவர்க்குச் சிங்கத்தின்மேல் ஏறிக்கொண்டு வந்து முன் நிற்பாள்என்று பொருள்படும் இப்பாடற்கண், முதலாம் இரண்டாம் நான்காமடிகள்மடக்கியவாறு.(தண்டி. 95 உரை.)