முதலடியொடு மூன்றாமடி நான்காமடிஆதி மடக்கு

இஃது இரண்டாமடி ஒழிந்த மூவடி ஆதி மடக்கு எனவும் படும்.எ-டு : ‘கொடியார் கொடியார் மதில்மூன்றும் கொன்றபடியார் பனைத்தடக்கை நால்வாய்க் – கடியார்உரியார் உரியார் எனைஆள ஓதற்கரியார் கரியார் களம்.’கொடியார், கொடி ஆர் மதில்; (நால்வாய்) உரியார், (எனை ஆள) உரியார்;ஓதற்கு அரியார், களம் கரியார் – என்று பிரித்துப் பொருள் செய்க.கொடியவராகிய முப்புர அசுரரின் கொடிகள் ஆர்ந்த மூன்று மதில்களையும்அழித்த இயல்பினர்; பருத்த பெரிய கையையும், தொங்கும் வாயினையும் உடையயானையின் அஞ்சத்தக்க தோலைப் போர்த்தவர்; என்னை ஆட்கொள்ளு தற்குஉரியவர்; தம் பெருமை கூறுதற்கு அரியவர்; கழுத்துக் கறுத்தவர் என்றபொருளமைந்த இப்பாடற்கண், முதலாம் மூன்றாம் நாலாம் அடிகள் முதலில்மடக்கியவாறு. (தண்டி. 95 உரை)