முதலடியொடு நான்காமடி ஆதி மடக்கு

எ-டு : ‘மானவா மானவா நோக்கின் மதுகரம் சூழ்கான்அவாம் கூந்தல் என் காரிகைக்குத் – தேனேபொழிஆரத் தார்மேலும் நின்புயத்தின் மேலும்கழியா கழியா தரவு.’மானவா, மான் அவாம் நோக்கின்; கழியா, கழி, ஆதரவு – என்று பிரித்துப்பொருள் செய்க.“மனுகுலத்தில் தோன்றியவனே! மான் விரும்பும் நோக்கினை யும் வண்டுசூழும் மணம் நாறும் கூந்தலையும் உடைய என் மகளுக்கு, தேனைப் பொழியும்உன் ஆத்திமாலைமேலும் உன் புயங்களின்மேலும் உள்ள மிக்க ஆசை நீங்காது”என்று பொருள்படும் இப்பாடற்கண், முதலடியும் நான்காமடியும் முதலில்மடக்கி வந்தவாறு. (தண்டி. 95)