எ-டு : ‘கடன்மேவு கழிகாதல் மிகநாளு மகிழ்வார்கள்உடன்மேவு நிறைசோர மெலிவாள்தன் உயிர்சோர்வுகடன்மேவு கழிகாதல் மிகநாளும் மகிழ்வார்கள்உடன்மேவு பெடை கூடும் அறுகாலும் உரையாகொல்!’அடி 3, 4 கடன் மேவு கழிகாதல் மிக நாளும் மகிழ்வார்கள் உடன் மேவும்பெடை (யொடு) கூடும் அறுகாலும் உரையாகொல் என்று பிரித்துப் பொருள்செய்க.“முறையாகப் பொருந்தும் மிக்க காதல் சிறக்க நாடோறும் மகிழ்வார்பலர்; ஆயின், தலைவி தன்னொடு பொருந்திய நிறை என்ற பண்பு சோரமெலிகிறாள். இவளுடைய உயிர் தளர்வதனை, கடலை அடுத்த உப்பங்கழிகளில்மகிழ்ச்சி மிக நாடோறும் களிப்பு மிக்க பூக்களிலுள்ள தேன்களைப்பெடையொடு கூடி அருந்தும் வண்டுகளும் தலைவற்கு உரையாபோலும்” என்று,தோழி, தலைவன் சிறைப்புறமாகக் கூறிய இப்பாடற்கண், முதலடியும்மூன்றாமடியும் மடக்கிய வாறு. (தண்டி. 96 உரை.)