முதற்சூத்திர விருத்தி

மாதவச் சிவஞான முனிவரால் ‘வடவேங்கடம்’ என்ற சிறப்புப்பாயிரத்திற்கும் ‘எழுத்தெனப் படுப’ எனும் தொல்காப்பியமுதற்சூத்திரத்திற்கும் எழுதப்பட்ட விருத்தியுரை. அவ் வுரையே நூலாகக்கருதப்படும். சிறப்புப் பாயிரப் பகுதிக்குச் சோழ வந்தான் அரசஞ்சண்முகனார் எழுதிய மறுப்பு நூலொன்றுண்டு. அம்மறுப்புக்கு மறுப்பாகச்சூத்திரவிருத் திக்கு அரணாகச் செப்பறை விருத்தி என ஒன்றுண்டு. இவ்வாறுபலரும் கருத்து வேறுபாடும் ஒற்றுமையும் காட்டு மாறு அமைந்த சிறந்தநற்றமிழ் நடையிலமைந்த விருத்தியுரை இம்முதற் சூத்திர விருத்தி.இவ்விருத்தி யுரையுள் தொல் காப்பியச் சொல்லதிகார உரையாசிரியரானசேனாவரை யரும் திருக்குறள் உரையாசிரியரான பரிமேலழகரும் முனிவரால்பாராட்டப்படுவர். இவ் விருவரையும் அவர் மறுக்கு மிடங்களும் உள.சிவஞானமுனிவர் எடுத்தாண்ட பல வடமொழிக் கருத்துக்கள் பிரயோக விவேகம்எனும் நூலினின்று ஏற்றுக்கொண்டவை; அந்நூற் கருத்துக்களுள் முனிவர்மறுக்குமிடமும் உள. இவ்விருத்தி யுரையுள் முனிவ ருடைய இருமொழிப்புலமையும் கண்டு மகிழலாம்.