எ-டு : ‘அனைய காவலர் காவலர் காவலர்இனைய மாலைய மாலைய மாலையஎனைய வாவிய வாவிய வாவியஇனைய மாதர மாதர மாதரம்.’அனைய கா அலர் காவலர் காவலர்; இனைய – (வருந்த) மாலைய (மயக்கம்தரும்) மாலைய (- இயல்பின) மாலைய (மாலைக் காலங்கள்); என்னை அவாவிய ஆவிய(-உயிர் போன்ற) வாவிய (- தாவிய) இனைய மாது அரம்; ஆதரம் (-ஆசை) மா தரம்(- பேரளவிற்று) – என்று பிரித்துப் பொருள் செய்க.“அத்தன்மைத்தாகிய சோலையில் மலர்களாகிய மன்மத பாணங்களை நம் தலைவர்விரும்பவில்லை; நாம் வருந்து வதற்குரிய மயக்கத்தைத் தரும்இயல்பினையுடையன, மாலைப் பொழுதுகள்; என்னை விரும்பிய உயிர் போன்ற, என்விருப்பத்திற்கு மாறாக மனம் தாவிய இந்தத் தோழி, அரத்தை ஒத்தவள்; ஆசையோஎனக்கு மிக்குளது” என்று தலைவி மாலையிற் புலம்பியவாறாக நிகழும்இப்பாடற்கண், நான்கடியும் முதற்சீர் ஒழிய முற்றும் மயக்கியவாறு.(தண்டி. 95)