எழுத்துக்கள் தம் பெயரைச் சொல்லி நிலைமொழி வருமொழி களாய்ப்புணருமிடத்தே, தமக்குக் கூறப்பட்ட விதியைக் கடந்து, மொழி முதலாகாஎழுத்துக்கள் முதலாகியும் மொழி யிடை மயங்க லாகா எழுத்துக்கள்மயங்கியும் இயலும்.எ-டு:‘அவற்றுள், லளஃகான் முன்னர் யவவும் தோன்றும்’(தொ. எ. 24 நச்.)இதன்கண், தன் பெயரை மொழிதலின் லகரம் மொழிமுத லாயும் ‘அவற்றுள்’என்பதன் ஈற்று ளகரத்தொடு மயங்கியும் வந்தவாறு.‘கெப் பெரிது’ என்புழி’ என்புழி, ‘கெ’ தன் பெயர் மொழி தலின் ‘எகரம்மெய்யோடு ஏலாது’ என்ற விதி யிறந்து மெய்யோடு ஈறாய் நின்றவாறு. (நன்.121)