முதனிலைத் தொழிற்பெயர், ஏவல் வினைபுணருமாறு

யரழ-க்களை ஒழிந்த எட்டு மெய்யெழுத்துக்களையும் (ஞ் ண் ந் ம் ல் வ்ள் ன்) இறுதியாகவுடைய முதனிலைத் தொழிற் பெயர்களும் ஏவல்வினைகளும்,வருமொழியாக யகரமெய் ஒழிந்த பிறமெய்களை (க் ச் த் ப் ஞ் ந் ம் வ்)முதலாகவுடைய சொற்கள் வருமாயின், பெரும்பான்மையும் உகரச்சாரியைபெற்றுப் புணரும். சில ஏவல்வினைகள் அவ்வுகரச் சாரியை பொருந்தா.இவ்வெட்டு மெய்யீற்று முதனிலைத் தொழிற்பெயர்களும் ஏவல்வினைகளும்முறையே உரிஞ், உண், பொருந், திரும், வெல், வவ், துள், தின் – என்பன. கச த ப முதலிய எட்டு மெய்களை முதலாகக் கொண்ட வருமொழி முறையே கடிது,சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது, என்பவற்றைமுதனிலைத் தொழிற்பெயரொடு புணர்க்க இடையே உகரச்சாரியை நிகழ்ந்துமுடியுமாறு காண்க.உரிஞுக் கடிது, உரிஞுச் சிறிது, உரிஞுத் தீது, உரிஞுப் பெரிது,உரிஞு ஞான்றது, உரிஞு நீண்டது, உரிஞு மாண்டது, உரிஞு வலிது -எனவரும்.உண், பொருந் – முதலியவற்றுக்கு உகரச்சாரியை கொடுத்து முடிக்க.வன்கணம் வருவழிச் சாரியைப் பேற்றினைஅடுத்து வல்லெழுத்து மிகுதலும்,பிறகணம் வருவழி உகரப் பேற் றோடு இயல்பாக முடிதலும் கொள்க.இனி, இவ்வெட்டு ஏவல்வினைகளும் நிலைமொழியாக நிற்ப, க ச த ப முதலியஎட்டுமெய்களை முதலாகவுடைய வரு மொழிகள் முறையே கொற்றா, சாத்தா, தேவா,பூதா, ஞெள்ளா, நாகா, மாடா, வளவா – எனக் கொண்டு சாரியைப் பேற்றினைத்தந்து முடிக்க. வன்கணம் வருமிடத்து வலிமிகு தல் இல்லை.வருமாறு: உரிஞு கொற்றா, உரிஞு சாத்தா, உரிஞு தேவா, உரிஞு பூதா;உரிஞு ஞெள்ளா, உரிஞு நாகா, உரிஞு மாடா, உரிஞு வளவா.இவ்வாறே உண், பொருந் – முதலியவற்றுக்கு உகரச்சாரியை கொடுத்துமுடிக்க.உகரச்சாரியை பெற்றும் பெறாமலும் வரும் ஏவல்வினைகள் ண் ன் ல் ள்என்னும் நான்குமெய் ஈற்றனவாம். ஏனைய நான்கு ஈறுகளும் உகரம் பெற்றேவரும் எ-டு: உண் கொற்றா, தின் சாத்தா, வெல் பூதா, துள் வளவா – இவைஉகரம் பெறாமல் வந்தன. (நன். 207)