ஆசிரியன் தான் சொல்லும் இலக்கணத்திற்கு விதியுள்ள இடத்தைச்சொல்லுதல் முடிவிடங்கூறல் என்னும் உத்தி. ‘ லளஈற்று இயைபினாம் ஆய்தம்அஃகும் ’ என்னும் இச் சூத்திரம், ‘ குறில்வழி லள-த்தவ் வணையின்ஆய்தம், ஆகவு ம் பெறூஉம் அல்வழி யானே ’ (நன். 228) என்னும் சூத்திரத்தை நோக்கிக் கூறலின்,முடிவிடங்கூறல் என்னும் உத்தியின் பாற்படும். (நன். 97சங்கர.)