மலையரண், காட்டரண், நீரரண் ஆகிய மூன்றையும் காவலாகக் கொண்ட நாடு இப்பெயர் பெற்றது போலும். முக்காவனாடு என்பது ஆமூர் மல்லனுக்குரியது போலும். அந்த மல்லனைச் சோழன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி பொருது அட்டு நின்றதாக சாத்தந்தகையார் என்ற சங்கப் புலவர் கூறியுள்ளார்.