மீ என்பது மேல் என்ற சொல்லின் மரூஉ. அது வருமொழி வன்கணம் வரின்இயல்பாகவும், வருமொழி வல்லெழுத்து மிக்கும், வருமொழி வல்லெழுத்துக்குஇனமான மெல் லெழுத்துப் பெற்றும் புணரும். இஃது அல்வழி முடிவு. (எ.ஆ.பக். 142)எ-டு : மீகண், மீசெவி, மீதலை, மீபுறம்;மீக்கோள்,மீப்பல்;மீங்குழி, மீந்தோல் – மேலாகிய கண் முதலாகப் பொருள்செய்க.மீகண் என்பதற்கு மேலிடத்துக்கண் என்று வேற்றுமைப் பொருள்பட உரைகூறுவர் இளம்பூரணரும் நச்சினார்க்கினி யரும். கண் என்பதனைஇடப்பெயராகக் கொண்டு மீ ஆகிய கண் – மேலிடம்- என்று பொருள்கொள்வாருமுளர். (எ.கு.பக். 229)