மீ என்பது இயல்பான சொல் அன்று; மேற்கு என்ற சொல் மீ என மரீஇயிற்றுஎன்றார் நச்சினார்க்கினியர்.மேல் என்ற சொல் ஈற்றுமெய் கெட்டு ஏகாரம் ஈகாரமாக மருவுதல் இயல்புஆதலின், மேல் என்பது மீ என மருவிற்று என்பது சிறக்கும். (தொ.பொ.பக்.742 பேரா.)இடம் வரைதல் – மேலிடத்தை வரையறுத்துச் சுட்டுதல். (எ.ஆ.பக். 142தொ.எ. 250 நச்.)