மீயச்சூர் என வழங்கப்படும் ஊர், தஞ்சாவூர் மாவட்டத்தில் காணப்படுகிறது. அப்பராலும், சம்பந்தராலும் இங்குள்ள இறைவர் புகழ்பெற்றுள்ளனர். திருமீயச்சூரில் உள்ள கோயிலில் அம்பிகை வீற்றிருக்கும் கோலத்துடனும், இக்கோயிலுள் உள்ள வடக்கு சந்நிதியில் இறைவனும் (மீயச்சூர் இளங்கோயில்) உள்ளனர். அப்பர். இவ்விறைவனைப் பாடும் போது.
தோற்றும் கோயிலும் தோன்றிய கோயிலும்
வேற்றுக் கோயில் பலவுள மீயச்சூர்க்
கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடையரற்
கேற்றக் கோயில் கண்டீர் இளங்கோயிலே’
என இக்கோயிலைச் சிறப்பிக்கின்றார். மீயச்சூர் என்ற ஊர்ப் பெயரின் பொருள் விளங்கவில்லை எனினும்,
காயச் செவ்விக் காமற் காய்ந்து கங்கையைப்
பாயப் புடர் புன் சடையிற் பதித்த பரமேட்டி
மாயச் சூரன் றறுத்த மைந்தன் றாதை தன்
மீயச்சூரே தொழுது வினையை வீட்டுமே (198-1)
என்ற ஞானசம்பந்தர் பாடலடிகள், முருகன் கதைத் தொடர்பு காட்டும் நிலையில் புராண அடிப்படையில் இப்பெயர் தோற்று விக்கப்பட்டு இருக்குமோ என்ற எண்ணம் தோன்றுகிறது.