‘மீன்’ வன்கணத்தொடு புணர்தல்

மீன் என்னும் நிலைமொழி ஈற்று னகரம் வேற்றுமைப் புணர்ச்சிக்கண்வன்கணம் வருமிடத்தே றகரத்தோடு உறழ்ந்து முடியும்; அல்வழிக்கண்இயல்புபுணர்ச்சியாம்.எ-டு : மீன் + கண் =மீற்கண், மீன்கண்; மீன் +செவி = மீற்செவி,மீன்செவி; மீற்றலை, மீன்றலை;மீற்புறம், மீன்புறம் – என்பனவும்காண்க.மீன் கடிது, சிறிது, தீது, பெரிது – என அல்வழிக்கண்இயல்பாயிற்று. (நன். 213)