மீன் புணருமாறு

மீன் என்ற சொல் அல்வழிப் புணர்ச்சியில் வன்கணம் வரினும் இயல்பாகப்புணரும்; வேற்றுமைப் பொருட்புணர்ச்கிக்கண் வல்லெழுத்தினோடு உறழ்ந்துமுடியும்.எ-டு : மீன் கரிது, சிறிது, தீது, பெரிது : அல்வழி; மீன்கண்,மீற்கண்; மீன்சினை, மீற்சினை; மீன்றலை, மீற்றலை; மீன்புறம், மீற்புறம்- வேற்றுமை உறழ்ச்சி முடிபு. (தொ.எ.339 நச்.)