மீகண், மீக்கூற்று, மீக்கோள்,மீந்தோல் சொல் முடிவு

மீகண் என்பது கண்ணினது மேலிடம் எனப் பொருள் தந்து நிற்குமேனும்,ஆறனுருபின் பயனிலையாம் மீ என்னும் வருமொழி நிலைமொழியாய் நின்றுவல்லெழுத்து மிகாது புணர்ந்தமையின் இலக்கணப் போலியாய்அல்வழியாயிற்று.மீக்கூற்று என்பது புகழ். அது மேலாய சொல்லான் பிறந்த புகழ் என்னும்மேம்பாடு எனப் பொருள் தந்து நிற்றலின், பண்புத் தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை.மீக்கோள் என்பது மேற்போர்வை. அது யாக்கையின்மேல் கொள்ளுதலையுடையபோர்வை – எனப் பொருள் தந்து நிற்றலின், ஏழாம் வேற்றுமைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. ஈண்டு மீ என்றது இடப்பொருளோடு ஏழாம்வேற்றுமையுருபின் பொருள் பட நின்றதேனும், கண்ஆதி உருபு வேண்டாமையின்,வேற்றுமைத் தொகை யாயிற்று.மீந்தோல் என்பது மேற்றோல். அது மேலாய தோல் – எனப் பொருள் தந்துநிற்றலின் பண்புத்தொகை. இஃது இக் காலத்துப் பீந்தோல் என மரீஇயிற்று.(நன். 178 சங்கர.)