மிழலை என்னும் ஊரைத் தன்னகத்தடக்கியது மிழலைக் கூற்றம் போலும்., மிழலைக் கூற்றம் என்பது சோழநாட்டின் ஒரு பகுதி, இதன் தலைவன் எவ்வி. இவனை வென்று இக்கூற்றத்தைத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் கைப்பற்றினான். மிழலை நாடென்பது மாயவரத்திற்கு அண்மையில் அமைந்த தாகும் அப்பகுதியில் மாயவரத்திற்கு மேற்கே 12 மைல் தூரத்தில் பாழடைந்த ஊராக இம்மிழலை காணப்படுகிறது.
“ஓம்பா வீகை மாவேள் எவ்வி
புனலம்புதவின் மிழலை யொடு” (புறம்.24:18 19)