மின் என்ற சொல் மின்னுதல் தொழிலையும் மின்னலையும் குறிக்கும். இஃதுஅல்வழியிலும் வேற்றுமையிலும் ஞகார ஈற்றுத் தொழிற்பெயர் போல வன்கணத்துஉகரமும் வல்லெழுத்தும், மென்கணத்தும் இடைக்கணத்து வகரத்தும் உகரமும்,யகரம் வருவழி இயல்பும், உயிர் வருவழி ஈற்று ஒற்று இரட்டுதலும்பெற்றுப் புணரும்.எ-டு : மின்னுக் கடிது; மின்னு நன்று, மின்னு வலிது, மின் யாது;மின்னரிது -அல்வழி. மின்னுக்கடுமை; மின்னு நன்மை, மின்யாப்பு,மின்னுவலிமை; மின்னருமை – வேற்றுமை (தொ.எ.345 நச்.)