மின் பின் பன் கன்:புணர்ச்சி

மின் முதலிய இந்நான்கு சொற்களும், தொழிற்பெயர் போல, யகரம் நீங்கியபிறமெய்கள் வருமொழி முதற்கண் வரின் உகரச் சாரியை பெறும். கன்என்பதொன்றும் அகரச்சாரியை பெற்று வருமொழி வல்லெழுத்தும்இனமெல்லெழுத்தும் மிக்கு உறழும்.எ-டு: மின்னுக் கடிது, மின்னு நீண்டது, மின்னு வலிது; மின்னுக்கடுமை, மின்னுநீட்சி, மின்னுவலிமை – என அல்வழி வேற்றுமை இருவழியும்உகரச்சாரியை பெற்றது. ஏனைய மூன்றொடும் இவ்வாறே பொருந்த ஓட்டுக.கன்னுக் கடிது, கன்னுக் கடுமை – மேற்கூறிய பொதுவான முடிபு. கன்னத்தட்டு, கன்னந் தட்டு – ‘கன்’ அகரம் பெற்று மெல்லினத்தோடுஉறழ்ந்தது.(கன் – சிறுதராசுத் தட்டு) (நன். 217)