மா என்ற பெயர்ச்சொல் புணருமாறு

மா என்ற பெயர் விலங்குகளையும் மாமரத்தையும் உணர்த்தும். இஃதுஅல்வழிக்கண் வன்கணம் வந்துழியும் இயல்பாம்.எ-டு : மா +குறிது, சிறிது தீது பெரிது = மா குறிது, மா சிறிது,மா தீது, மா பெரிது,வேற்றுமைக்கண், மா என்பது மரமாயின், அகர எழுத்துப் பேறளபெடையும்இனமெல்லெழுத்தும் பெற்று முடியும்; விலங்கைக் குறிக்குமாயின் னகரச்சாரியை பெற்று வருமொழி வன்கணத்தோடு இயல்பாக முடியும்.எ-டு: மாஅந்தளிர், மாஅங்கோடு; மான்கோடுமாங்கோடு என, மாமரத்தைக் குறிக்கும் சொல் அகரம் பெறாதுமெல்லெழுத்து மிகுதலுமுண்டு; மாவின் கோடு – எனச் சிறுபான்மை இன்சாரியைபெறுதலுமாம். (தொ.எ.231 நச். உரை)