மிறைக்கவிகளுள் ஒன்று; ஒரு பாட்டினை ஈற்றெழுத்தை முதலாகக் கொண்டு(-தலைகீழாகப்) படிப்பினும் அப்பாட் டாகவே மீளவருவது.எ-டு : ‘நீவாத மாதவா தாமோக ராகமோதாவாத மாதவா நீ.’நீவாத மாதவா – நீங்காத மாதவத்தை உடையவனே! தா மோக ராகமோ – வலியஅறியாமையாகிய ஆசைகள்; தாவா – நீங்க மாட்டா; (ஆதலின்) மாதவா (மாது அவா)- இப் பெண்ணின் ஆசையை; நீ – நீக்குவாயாக.திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய ஒரு பதிகம் பதினொரு பாடல்களுமே(மூன்றாம் திருமுறை 117ஆம் பதிகம்) மாலை மாற்றாக அமைந்தவை. அவையேஇச்சித்திர கவிக்கு மூலகவியாம். (தண்டி. 98 – 3)