மாறோகம் என்பது ஒரு சிறு நாடு. இது மாறோக்கம் என வழங்கும் திருநெல்வேலி மாவட்டத்தில் கொற்கையைச் சூழ்ந்த நாடு. அகநானூற்றில் 377 ஆம் பாடலை இயற்றிய காமக்கணி நப்பாலத்தனாரும், புறநானூற்றில் 37, 39, 126, 174, 226, 280, 383 ஆகிய பாடல்களை இயற்றிய நப்பசலையாரும் இவ்வூரினர்.