தண்டிஅலங்காரம் குறிப்பிடும் அணிகளுள் நுட்பம் என்பதனைக் குறைத்து,பிற முதனூல்களில் கூறப்பட்ட அணிகளையும் திரட்டி, முந்து நூல்களுள்கூறப்பெறாத பூட்டுவில் அணி – இறைச்சிப் பொருள்கோளணி – பொருள் மொழி அணி- என்பவற்றொடு வகைமுதல் அடுக்கணி – இணைஎதுகை அணி – உபாய அணி – உறுசுவைஅணி – புகழ்வதின் இகழ்தல் அணி என்னும் அணிகளையும் கூட்டிப் பொருளணிகளை64 ஆக மிகுத்து இந்நூல் கூறும். நுட்ப அணி ‘பரிகரம்’ என்ற அணியுள்அடக்கப்பட்டது. அடுத்த மூன்றும் சொல்லிலக்கணத்திலும் பொருளியலிலும்புறத் திணையியலிலும் கூறியபடியே செய்யுட்கு அழகாதலின் கொள்ளப்பட்டன.ஏனைய ஐந்தும் அழகு எய்துவதால் இலக்கியம் கண்டு இவ்வணியிலக்கணத்துள்கொள்ளப் பட்டன. (மா.அ. 87)