இத்தொடர் தொல்காப்பியத்தில் பயில வழங்குகிறது ‘மானம்’ என்ற இச்சொல்வழங்கப்படுமிடத்து முன்மொழி பெரும் பான்மையும் மகரமெய் ஈற்றதாய்உள்ளது. சந்தியில் மகரம் கெட ‘மிகினு மான மில்லை’ என்றே தொடர்அமைகிறது. மானம் என்றும் ஆனம் என்றும் அப்புணர்மொழியில் சொல்லைப்பிரிக்கலாம். இனம்பூரணரும் நச்சினார்க்கினிய ரும் மானம் என்பதேசொல்லாகக்கொண்டு ‘மானமில்லை’ என்ற தொடர்க்குக் குற்றமில்லை’ என்றுபொருள் செய்தனர். (தொ.எ. 199, 271 நச். முதலியன.)‘ஆனம்’ என்பதே சொல்லாகக் கொண்டு (ஆனம் – ஹானம்) ‘குற்றம்’ என்றுகருத்துக் கொள்வார் சிலர். (எ.கு.பக்.190) ஆயின், தொ.சொல்.111ஆம்நூற்பாவில் (சேனா.) இப்பிரிப்புப் பொருந்தாமை காண்க.மானம் இல்லை – வரைவு (நீக்குதல்) இல்லை – என்பர் சிலர்.மானம் குற்றம் என்ற பொருளில் ‘ மானமில்லை மற்றவன் மா ட்டென ’ பெருங்கதை – I : 47: 225 என்ற தொடரில் வந்துள்ளது.