மாந்தை

மாந்தை என்னும்‌ ஊர்ப்பெயர்‌ மரந்தை யெனவும்‌ வழங்கப்‌ பெற்றுள்ளது. இரண்டும்‌ ஒரே ஊரின்‌ பெயரே. இலக்கியங்‌களில்‌ பாட வேறுபாடாக இடம்‌ பெற்றிருப்பதாகவும்‌ தெரிகிறது. இது கடற்கரை நகரம்‌, மேலைக்கடற்கரையில்‌ சேர மன்னார்‌களுக்கு உரியதாய்‌ இருந்திருக்கிறது. சேரன்‌ செங்குட்டுவனின்‌ தாயத்தாரான சேரமன்னர்‌ கூட்டுத்‌ தலைநகராக இருந்திருக்‌கலாம்‌.
“இரைதேர்‌ நாரையெய்திய விடுக்குந்‌,
துறைகெழு மாந்தையன்ன இவணலம்‌” (நற்‌. 35:6 7)
“கடல்‌ கெழு மாந்தையன்ன வெம்‌
பூவேட்டனை யல்லையானலந்தந்து சென்மே”, (ஷே.395:9 10)
“குட்டுவன்‌ மாந்தை அன்ன எம்‌
குழை விளங்கு ஆய்நுதற்‌ கிழவனும்‌ அவனே”. (குறுந்‌. 3476 7)
“நாரை நிரை பெயர்ந்து அயிரை ஆரும்‌,
ஊரோ நன்று மன்‌, மரந்தை”. (௸. 166:2 3)
“இரங்கு நீர்ப்பரப்பின்‌ மரந்தையோர்‌ பொருந!” (பதிற்‌. 90 28)
“வலம்படு முரசிற்‌ சேரலாதன்‌
முள்நீர்‌ ஒட்டிக்‌ கடம்பு அறுத்து, இமயத்து
முன்னோர்‌ மருள வணங்குவில்‌ பொறித்து,
நல்நகர்‌ மாந்தை முற்றத்து ஒன்னார்‌
பணிதிறை தந்த பாகுசால்‌ நன்கலம்‌
பொன்‌ செய்பாவை வயிரமொடு ஆம்பல்‌
ஒன்று வாய்‌ நிறையக்குவைஇ, அன்று அவண்‌
நிலம்தினத்துறந்த நிதியத்து அன்ன” (அகம்‌, 127;3 10)
“குரங்கு உளைப்‌ புரவிக்‌ குட்டுவன்‌
மாந்தை அன்ன, என்‌ புலம்தந்து சென்மே”. (௸. 376;17 18).