மாத்திரை

இஃது ஒரு காலஅளவின் பெயராம். இயல்பாகக் கண்ணை இமைத்தல் நேரமும்,கையை நொடித்தல் நேரமும் ஒரு மாத்திரையாம். கை நொடித்தலின்கண், நினைத்தஅளவில் கால்மாத்திரையும், கை நொடித்தற்குக் கட்டைவிரலை நடு விரலொடுசேர்த்த அளவில் அரைமாத்திரையும், அவ்விரு விரல்களையும் முறுக்கும்அளவில் முக்கால்மாத்திரையும், விடுத்து ஒலித்த அளவில் ஒருமாத்திரையும்ஆகிய காலம் கழியும் என்பர்.எழுத்தொலியை மாத்திரை என்ற காலஅளவு கொண்டு கணக்கிடுவர். (தொ. எ. 7நச். மு. வீ. எழுத். 98)