மாத்திரை அளவுகள்

கண்ணிமைத்தல் நேரமும் கைநொடித்தல் நேரமும் ஒரு மாத்திரை நேரத்தைப்பொதுவாகக் குறிப்பன. ஓர் அகங் கைக்கு மேல் நான்கு அங்குலம் இடைகிடப்பமற்றோர் அகங்கையை வைத்துக் கொண்டு மெல்லவும் விரையவும் இன்றிஅடித்தல், விரைதலும் நீட்டித்தலு மின்றி முழங் காலைக் கையால்சுற்றுதல் – முதலியனவும் ஒரு மாத்திரை அளவின. குருவி கூவுதல் ஒருமாத்திரைக்கும், காகம் கரைதல் இரண்டு மாத்திரைக்கும், மயில் அகவுதல்மூன்று மாத்திரைக் கும், கீரியின் குரல் அரை மாத்திரைக்கும் அளவு.நோயில்லாத இளையோன் குற்றெழுத்தினைக் குறைந்த அளவில் எத்துணை நேரம்ஒலிப்பானோ அத்துணை நேரம் ஒரு மாத்திரை எனப்படும். (எ. ஆ. பக். 18)