மிறைக் கவிகளுள் ஒன்று; ‘மாத்திரை வருத்தனம்’ எனவும் படும்.மாத்திரைச் சுருக்கத்தில் கூறிய இலக்கணத்தையும் இலக்கியத்தையும்மறுதலையாகக் கொண்டு பாடல் அமைப்பது. அஃதாவது ஒரு மாத்திரை அளவுடையகுறில் களை இரண்டு மாத்திரை அளவுடைய நெடில்களாக்கிப் பிறிதொரு பொருள்வரப் பாடுவது.எ-டு : ‘தருவொன்றை நீட்டிடத் தருணி கூந்தலாம்;மருவுதீ நீட்டிட மாண்புறும் நீர்நிலை;திருவுறு கழுத்தினை நீட்டத் தீம்பணாம்;உருவமேல் நீட்டிடின் உயர்ந்த காடுமாம்.’தரு – ஒதி; மங்கை கூந்தல் – ஓதிதீ – எரி; நீர்நிலை – ஏரிகழுத்து – கந்தரம்; தீம்பண் – கந்தாரம்‘கந்தாரம்’ மேலும் நீளின் காந்தாரம் (- காடு)எ-டு : ‘அளபொன் றேறிய வண்டதின் ஆர்ப்பினால்அளபொன் றேறிய மண்அதிர்ந் துக்குமால்;அளபொன் றேறிய பாடல் அருஞ்சுனைஅளபொன் றேறழ (கு) ஊடலைந் தாடுமால்’ (தண்டி. 98 உரை)அளபு (- மாத்திரை) ஒன்று ஏறிய வண்டு : (வண்டு – அளி) ஆளி;அளவு ஒன்று ஏறிய மண் : (மண் – தரை) தாரை;அளபு ஒன்று ஏறிய பாடல் : (பாடல் – கவி) காவி;அளபு ஒன்று ஏறிய அழகு : (அழகு – வனப்பு) வானப்பு.(வான்அப்பு – மழைநீர்)தன் மகள் உடன்போயவழி, தாய் புலம்புவதாக அமைந்தது இது.“காட்டில் ஆளி முழங்குவதால் என் மகளுடைய காவி (நீலோற்பலப்பூப்)போன்ற கண்கள், அச்சத்தால் மனம் நடுக்குறவே, தாரையாகக் கண்ணீர்பெருக்கும். அருஞ்சுனை நீர் மழைநீர்ப் பொழிவினால் அலைவுற்றுஅசையாநிற்கும்.”‘உகுமால்’ என்பது ககரம் விரித்தல் விகாரம் பெற்றது. காவி -உவமையாகுபெயரால், கண்.) (இ. வி. 690 – 5 உரை)