மாத்திரைச் சுருக்கம்

மிறைக் கவிகளுள் ஒன்று; ஒரு சொல்லின் முதல் நெட்டுயிர்மாத்திரையைக் குறைத்தால் வேறொரு சொல்லாகிப் பிறிதொரு பொருள் தரஅமைப்பது. (பண்டைக் காலத்தில், எ, ஒ (இன்றைய ஏ, ஓ) என்ற நெடில்களைக்குறிலாக்க ஏடுகளில் எ ஒ – இவற்றின் மேல் புள்ளி யிட்டு (எ ) ஒ ) என்று) எழுதுவது மரபு.)எ-டு : ‘நேரிழையார் கூந்தலின்ஒர் புள்ளிபெறின் நீள்மரமாம்;நீர்நிலையோர் புள்ளி பெறநெருப்பாம்; – சீரளவுகாட்டொன்(று) ஒழிப்ப இசையாம்; கவின் அளவும்மீட்டொன்(று) ஒழிப்ப மிடறு.’ஓதி (பண்டு ‘ஒதி’ என்று எழுதப்பட்டது) என்பது கூந்தல்;நெட்டுயிரைப் புள்ளியைச் சேர்த்துக் குறிலாக்கினால், ஒதி – மரவிசேடம்.ஏரி (பண்டு ‘எரி’ என்று எழுதப்பட்டது) என்பது நீர்நிலை;நெட்டுயிரைப் புள்ளியைச் சேர்த்துக் குறிலாக்கினால், எரி – நெருப்பு.காந்தாரம் – காடு; முதல் நெட்டுயிர்மெய் குறிலானால், காந்தாரம் -கந்தாரப்பண்.கந்தாரம் என்ற சொல்லின் இடைநின்ற நெட்டுயிர்மெய் குறிலானால்,கந்தரம் – கழுத்துமாத்திரை குறைத்து ஒரு மாத்திரைத்தாகிய குறிலாக்கி வெவ்வேறு பொருள்காணும் சித்திரம் அமைதலின், இது மாத்திரைச் சுருக்கம் (சுதகம்)ஆயிற்று. (தண்டி. 98 உரை)