மாகறல்

செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ளது இவ்வூர். சேயாற்றின் கரையில் உள்ள ஊர். சம்பந்தர் இவ்வூரினைப் பாடியுள் ளார்.
இங்கு கதிர் முத்தினொடு பொன் மணிகள் உந்தி யெழில் மெய்யுளுடனே
மங்கையரு மைந்தர்களு மன்னு புன லாடி மகிழ் மாகறல் உள்ளான் (330-4)
துஞ்சு நறுநீல மிருணீங்கவொளி தோன்று மதுவார் கழனி வாய்
மஞ்சுமலி பூம் பொழிலின் மயில் கண்ட மாடமலிமா கறலுளான் (330-5)
என திருஞானசம்பந்தர் இவ்வூரின் சிறப்பு பற்றிக் குறிப்பிடுகிறார். இப்பாடல்களை நோக்க, செழிப்பான ஊர் என்பது தெரிகிறது. இன்று சேயாற்றின் கரையில் உள்ளது எனக் காண, அறல் இருந்திருக்க வேண்டும் என்பதை யுணரவியலுகிறது. எனவே சிறந்த மணற் பகுதியையுடையது என்ற பொருளில் மா அறல் என்ற பெயர் மாகறல் ஆகியிருக்குமோ எனத் தோன்றுகிறது.