மழை என்ற சொல் புணருமாறு

மழை என்ற ஐகார ஈற்றுச் சொல், வன்கணம் வருவழி அல்வழிப்புணர்ச்சிக்கண் இயல்பாகவும், வேற்றுமைப் புணர்ச்சிக்கண் அத்தும்இன்னும் பெற்றும் புணரும்.எ-டு : மழை கடிது, சிறிது தீது, பெரிது – அல்வழி; மழையத்துச்சென்றான், மழையிற் சென்றான் -வேற்றுமை; மழையின்கண் சென்றான் – என்பதுபொருள். (தொ. எ. 287 நச்.)