மல்லி

மல்லி கிழான்‌ காரியாதியை ஆவூர்‌ மூலங்கிழார்‌ படியது” என்ற தொடரால்‌ நமக்குக்‌ கிடைக்கும்‌ ஊர்ப்பெயர்‌ மல்லி என்பது. காரியாதி குடநாட்டுத்‌ தலைவன்‌ என்பதை பெரும்‌ பெயர்‌ ஆதி, பிணங்கு அரில்‌ குடநாட்டு என்ற சங்க இலக்கியத்‌ தொடர்‌ நமக்கு அறிவிக்கின்றது. காரியாதி மல்லிகிழான்‌ என்று கூறப்பெற்றிருப்பதால்‌ மல்லி என்ற ஊர்‌ குடநாட்டைச்‌ சார்ந்த ஊராக இருக்கலாம்‌ என்று எண்ணத்‌ தோன்றுகிறது. மல்லி என்ற சொல்‌ மல்லிகை எனவும்‌ பொருள்‌ படும்‌ சொல்‌லாகையால்‌ மல்லிகை மலர்ச்‌ செடிகள்‌ நிறைந்த பகுதியாய்‌ மல்லி என்ற ஊர்‌ அமைந்து, அம்‌ மலர்ச்‌ செடியால்‌ ஊர்ப்பெயர்‌ பெற்றதாக இருக்கலாம்‌.