மருவின் பாத்தி

மருமுடிபின் பகுதி. மருமுடிபு இலக்கணத்தொடு பொருந்திய மரு,இலக்கணத்தொடு பொருந்தா மரு – என இருபகுதிப் படும்.யாவர் என்னும் பலர்பால் படர்க்கைப் பெயர் இடையே வகரம் கெட்டுஉயர்திணை முப்பாற்கும் பொதுவான ‘யார்’ என்ற வினைக்குறிப்புப் போலவடிவு கொண்டு வருதல், யாது என்னும் அஃறிணை ஒருமை வினாப்பெயர் இடையேவகர உயிர்மெய் வர ‘யாவது’ என வருதல் – போல்வன உலக வழக் கினும்செய்யுள் வழக்கினும் மருவி வந்த இலக்கணத்தொடு பொருந்திய மருவாம். முன்+ இல் = முன்றில், மேல் + கண் = மீகண்- முதலியனவும் இலக்கணத்தொடுபொருந்திய மருவாம்.அருமருந்தன்ன – அருமந்த, சோழனாடு- சோணாடு, ஆற்றூர் – ஆறை முதலியனஇலக்கணத்தொடு பொருந்தா மரு. (தொ. எ. 172, 250, 355; 483 நச். உரை)மரூஉச் சொற்களின் பகுதிகள் புணரும்போது இடம் மாறும்.எ-டு : நுனிநா, முன்றில் (எ. கு. பக். 118)