வேற்றுமை முதலான பொருள்படச் சொற்கள் தொக்குத் திரிந்து ஒருசொல்லாய் மருவி நிற்கும் சொற்களும், இடம் மாறித் திரிந்து நிற்கும்சொற்களும் என இவை. இவ்விருதிறச் சொற்களும்புணர்நிலையைக் கருதுமிடத்து,நிறுத்த சொல்லும் குறித்து வரு கிளவியுமாய் நின்று புணர்தற் குரியன.இழிசினர் வழக்கும் பிழைபடுசொற்களும் கவர் பொருள்படு வனவும் அவ்வாறுநின்று புணரப்பெறா.எ-டு:சோணாடு, மலாடு, தெனாது, வடாது – இவை மரூஉ மொழிகள்.மீகண், முன்றில், நுனிநா, புறநகர் – இவை மயங்கியல்மொழிகள்.வந்திச்சி, போச்சு, ஆகச்சே, தங்கச்சி முதலியன – இவை இழிசினர்வழக்கு.சோழன்நாடு, மலையமான்நாடு, தெற்கின்கண்ணது, வடக்கின் கண்ணது – என்பனமுறையே சோணாடு முதலிய வாகத் திரிந்து ஒரு சொல்லாய் மருவிநின்றன.கண்மீ, இல்முன், நாநுனி, நகர்ப்புறம் – என்பன முறையே மீகண்முதலியவாகச் சொற்கள் பின்முன் இடமாறி நின்றன. (தொ. எ. 111 ச.பால.)