மகாராட்டிரம் என்பதன் மரூஉதான் மராட்டம் என்பதாகும் பொற்கம்மியருக்குச் சிறந்த இடம் அது, இதுவே மராட்டம் என்றும் இலக்கிய ஆட்சி பெற்றுள்ளது.
“மகதவினைஞரும் மராட்டக் கம்மரும்” (மணிமே. 19:107)
“தன்மை யடக்கிய நுண்ணிறைத் தெண்ணீர்
வரிவளைப் பணைத்தோள் வண்ண மகளிர்
சொரிவன ராட்டித் தூசுவிரித் துடீஇக்
கோங்கின் றட்டமுங் குரவின் பாவையும்
வாங்கிக் கொண்டு வாருபு முடித்து
மணி மராட்டத் தணிபெற வழுத்திக்
காவலன் மகளைக் கைதொழுதேத்தி” (பெருங் 1:57: 95 101)