மரம்+ அடி > மர + அடி > மராடி > மராஅடி.மகரஇறுதி கெட, மர அடி என நிலைமொழி இறுதியும் வருமொழி முதலுமாகியஇரண்டு அகரங்கள் ஆகாரமாகி ‘மராடி’ என்று முடிய, வருமொழி அடி என்ற சொல்என்ப தனை அறிவிக்க அறிகுறியாக அகரம் இடப்பட, மராஅடி என்றாயிற்று. (எ.ஆ. பக். 151)