மரம் அல்லாத எகின்முன் வல்லினம்

எகின் என்ற பெயர் அன்னப்பறவையைக் குறிக்கும்வழி வேற்றுமைக்கண்ணும்வன்கணம் வருமிடத்தே இயல்பாத லும், இருவழியும் அகரச் சாரியை பொருந்தவல்லெழுத்தோ இனமெல்லெழுத்தோ மிகுதலும் ஆம்.எ-டு : எகின்கால், எகின்செவி, எகின்றலை, எகின்புறம் எனவேற்றுமைப் புணர்ச்சியில் இயல்பு. எகினப்புள், எகினம்புள் எனஅல்வழியில் அகரம் மருவ வலி மெலி மிக்கன. எகினக்கால், எகினங்கால் எனவேற்றுமையில் அகரம் மருவ வலிமெலி மிக்கன. எகின மாட்சி, எகின வாழ்க்கை,எகின வழகு என வேற்றுமையில் பிறகணம் வரினும் அகரச்சாரியை மருவிற்று.(நன். 215)