மரப்பெயர்ப் புணர்ச்சி ஐ வகை

அ) மெல்லெழுத்து மிக்கு முடிவனவும்(எ-டு: விளங்கோடு, அதங்கோடு, மாங்கோடு)ஆ) வல்லெழுத்து மிக்கு முடிவனவும்(எ-டு: பலாஅக்காய், அத்திக்காய், புன்னைக்காய்)இ) அம்முச்சாரியை இடையே பெற்று முடிவனவும்(எ-டு: புளியங்கோடு, அரையங்கோடு, தேக்கங்கோடு)ஈ) ஒருகால் மெல்லெழுத்துப் பெற்றும், ஒருகால் வல் லெழுத்துப்பெற்றும் உறழ்ந்து முடிவனவும்(எ-டு: யாஅங் கோடு, யாஅக்கோடு; பிடாஅங் கோடு; பிடாஅக்கோடு;தளாஅங்கோடு, தளாஅக் கோடு)ஒருகால் மெல்லெழுத்துப் பெற்றும் ஒருகால் அம்முப் பெற்றும்உறழ்ந்து முடிவனவும்(எ-டு: உதிங்கோடு, உதியங்கோடு: ஒடுங்கோடு, ஒடுவங்கோடு)உ) ஒருகால் அம்முப் பெற்றும், ஒருகால் அம்முப் பெறாதுவல்லெழுத்துப் பெற்றும் உறழ்ந்து முடிவனவும்(எ-டு: புன்னையங்கானல், புன்னைக்கானல்; முல்லையந் தொடையல்,முல்லைத் தொடையல் )-என மரப்பெயர்ப் புணர்ச்சி ஐவகையாம். (இ.வி.எழுத். 83 உரை)