பண்டை யாப்பிலக்கண நூல்களுள் ஒன்று. இதன் ஆசிரியர் மயேச்சுரனார்.இவர் யாப்பருங்கல விருத்தியுரையாசிரிய ரால் பெரிதும் புகழப்படுபவர்.இந்நூற் சூத்திரங்களாக இதுபோது 64 கிட்டியுள. தொடைகள் சில,வெண்செந்துறை, குறட்டாழிசை, அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா,வஞ்சிவிருத்தம் எஞ்சிய யாப்பிலக்கணச் செய்திகள்யாவும் இந்த 64சூத்திரங்களில் சுட்டப்பட்டுள. இலக்கணங்களுக்கு உதாரணங்களும்இவ்வாசிரியராலேயே எடுத்தோதப்பட் டிருந்தன. (யா. வி. பக். 45முதலியன)