ஈற்றடி எழுத்து மிக்கு ஏனையடி எழுத்துக் குறைந்து தம்முள் ஒவ்வாதுவரும் வெண்பா. (எழுத்தெண்ணுகையில் புள்ளி யெழுத்துவிலக்கப்படும்.)எ-டு : ‘குருந்து குளிர்ந்து மயங்கு குவட்டு (8)மருந்து கொணர்ந்து மகிழ்ந்து நமது (8)பெரும்பிணியை நீக்குவதாம் பீடு.’ (10) (யா. வி. பக்.499)