மயிலை

சென்னையின் ஒரு பகுதியாக உள்ளது. மயிலாப்பூர் என்ற பெயரிலும், மயிலை என்றும் வழங்குகிறது. கபாலீச்சுரம் கோயிற் பெயராக அமைகிறது. மயில்கள் மிகுதி காரணமாகப் பெற்ற பெயராகத் தோன்றுகிறது. இப்போதுள்ள கோயில் முன்பு கடற்கரைக்கு அருகில் இருந்த தாகவும். பின்னர் கடல் உட்புக நேர்ந்ததால் தற்போதுள்ள இடத்தில் புதிதாகக் கட்டினர் என்றும் கருதுகின்றனர். இதற் சான்று, கடற்கரைக்கு அருகில் இருந்ததாக அமையும் இலக் கியக் காட்டுகளே ஆம். ஊர் திரை வேலையுலாவும் உயர் மயிலை என்பது சம்பந்தர் தேவாரப் பாடல். இறைவி மயில் வடிவில் இருந்து வழிபட்டமையால் மயிலை, மயிலாப்பூர் என்று பெயர் பெற்றது என்பர். எனினும் மயில் மிகுதியாக ஆர்க்கும் நிலையே இதற்குக் காரணம் என்பது, மயிலாப்பு என்ற இதன் அன்றைய வழக்கும் தெளிவாக்கும்
வடிவுடை மங்கையும் தாமுமெல்லாம்
வருவாரை எய்திக் கண்டோம் மயிலாப்புள்ளே
மங்குல் மதி தவழும் மாடவீதி
மயிலாப்பிலுள்ளார்
போன்ற தேவாரப் பாடல்களிலும் மயிலாப்பு என்ற வழக்கு அமையக் காணலாம்.