நன்னூற்குக் காண்டிகையுரை முதற்கண் வரைந்த சமண சமயப் புலவர். இவர்இளம்பூரணர், அவிநயவுரையாசிரியர், அமிதசாகரர் இவர்கள்தம் காலத்திற்குப்பிற்பட்டவர். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம், சிந்தாமணி,மணிமேகலை, முத்தொள்ளாயிரம், ஐந்திணை ஐம்பது, ஐந்திணையெழுபது, களவழிநாற்பது, கார் நாற்பது, திணை மாலை நூற்றைம்பது, திரிகடுகம்,திருக்குறள், பழமொழி, முதுமொழிக்காஞ்சி, சூளாமணி முதலிய இலக்கியங்களையும், அகத்தியம், தொல்காப்பியம், பனம்பாரம், அவிநயம், புறப்பொருள்வெண்பா மாலை, யாப்பருங்கலக்காரிகை என்னும் இலக்கணங்களையும் இவர்தம்முரையில் எடுத் தாண்டுள்ளார். இவர்காலம் 13ஆம் நூற்றாண்டாயிருத்தல்கூடும். இவரது உரை பல அரிய நுணுக்கங்களையுடையது.