மனோரமா

அடிக்குப் பத்தெழுத்துக்கள் கொண்ட வடமொழி விருத்தம்; இதன் அமைப்பு;1) முற்றிலும் இலகுவான கணம், 2) இடைக்கண் இலகு பெற்ற கணம், 3)இடையியல் குரு பெற்ற கணம், 4) ஈற்றில் ஒரு குரு வருதல் என்பன.எழுத்துக்களின் எண்ணிக்கையிலும் மாத்திரை எண்ணிக்கையிலும் கீழேகாட்டப்படினும், கணங்கள் அவ்வாறு அமைந்தில.எ-டு : ‘வாம தேவன் என்று மாமுனிகாம ரன்னை கருவு வைகுநாள்பேமு றுக்கு பிறவி யஞ்சினான்ஏமு றாமை யிதுநி னைக்குமால்.’மா முனி – னி ‘னீ’ என ஒலித்து இரண்டு மாத்திரை பெறும். இப்பாடலடிகளில், முதல் மூன்று சீர்களும் மும்மூன்று மாத்திரை,இறுதிச்சீர்கள் ஐந்து மாத்திரை அளவினவாதல் காணப்படும்.(இறுதிச் சீர்கள் கூவிளச்சீர் ஆகும்; நெடிலும் குறிலும் மாறி மாறிவந்து இறுதியில் நெட்டெழுத்தால் முடியும்.(வி. பா. பக். 36)