மத்த மயூர விருத்தம்

அடிக்குப் பதின்மூன்று எழுத்துக்கள் கொண்ட வடமொழி விருத்தம். இதன்அமைப்பு : 1. முற்றிலும் குருவான கணம், 2. இறுதி இலகுவான கணம், 3.முதற்கண் இலகுக் கணம், 4. ஈற்றில் குருக்கணம், அடுத்து ஒரு குருவருதல், அடிக்கு இருபத்திரண்டு மாத்திரைகள், முதல் நான்கெழுத்தில் ஒருநிறுத்தம், பின்னர் அடியிறுதியில் நிறுத்தம் என அமையும். பின்வரும்செய்யுளில் கண அமைப்பு இல்லை; ஆயினும் மாத்திரையளவும் நிறுத்தமும்முற்றிலும் பொருந்துகின்றன.அ) தேமா தேமா கூவிளம் தேமா புளிமாங்காய் – என வரும் ஐஞ்சீரடிநான்காக அமைவது. தேமா கூவிளம் என்பன நான்கு மாத்திரை அளவின.புளிமாங்காய் ஆறு மாத்திரை அளவிற்று.எ-டு : ‘காறோய் மேனிக் கண்டகர் கண்டப் படுகாலைஆறோ வென்ன விண்படர் செஞ்சோ ரியதாகிவேறோர் நின்ற வெண்மணி செங்கேழ் நிறம்விம்மிமாறோர் வெய்யோன் மண்டில மொக்கின் றதுகாணீர்’ (கம்பரா.9601)படுகாலை, ரியதாகி – ஈற்று நின்ற குறில் இரண்டு மாத்திரை அளவின.ஆ) புளிமா தேமா தேமா தேமா புளிமாங்காய் என அமைந்த ஐஞ்சீரடிநான்காகி வருவது. மாச்சீர் நான்கு மாத்திரை; காய்ச்சீர் ஆறுமாத்திரை.எ-டு : ‘மழுவின் கூர்வாய் வன்பலி டுக்கின் வயவீரர்குழுவின் கொண்டந் நாடிதொ டக்கப் பொறிகூட்டித்தழுவிக் கொள்ளக் கள்ளம னப்பே யவைதம்மைநழுவிச் செல்லு மியல்பின காண்மின் நமரங்காள்’22 மாத்திரை என்ற அளவில் பொருந்தும். (கம்பரா. 9592)இ) கூவிளம் தேமா கூவிளம் தேமா புளிமாங்காய் என அமைந்த ஐஞ்சீரடிநான்காகி வருவது. மாவும் விளமும் நான்கு மாத்திரை; காய்ச்சீர்ஆறுமாத்திரை.எ-டு : ‘மந்தர மன்னன் திண்புயன் வைவேல் மதிமன்னன்இந்திர துய்மன் னென்பவ னுலகீ ரேழுந்தன்சிந்தையி னுஞ்சந் தம்பெற வேசெங் கோலோச்சிக்கந்தர வாகன் தன்புவி கண்டான் கடைநாளில்’இதுவும் மாத்திரை அளவில் பொருந்துவதே.(நல்லாப்.) (வி.பா.பக். 54)