மத்த கோகில விருத்தம்

அடிக்குப் பன்னிரண்டு எழுத்துக்கள் பெற்று வரும் வடமொழி விருத்தம்.இதன் அமைப்பு : 1. முற்றிலும் இலகு கணம், 2. முதற்கண் குரு பெற்றகணம், 3. இடையில் குரு வரும் கணம், 4. இடையில் இலகு பெற்ற கணம் எனவருதல். இது ‘பிரியம்வதா’ எனவும்படும்.எழுசீர் மத்தகோகில விருத்தம் : குறிலீற்றுத் தேமா கூவிளம் ஆகியவைமும்முறை அடுக்கி வரப்பெற்று, இறுதியில் நெடிலீற்றுக் கூவிளம் அமையப்பெறுவதாகிய அடி நான்கனையுடையது.அ) நேரசையில் தொடங்குவது :எ-டு : ‘வாயி டைம்மறை யோதி மங்கையர் வந்தி டப்பலி கொண்டு போய்மேயி டம்மெரி கானி டைப்புரி நாட கம்மினி தாடினான்பேயொ டுங்குடி வாழ்வி னான்பிர மாபு ரத்துறை பிஞ்ஞகன்தாயி டைப்பொருள் தந்தை யாகுமென் றோது வார்க்கருள்தன்மையே’(தே. III 37 -5 ) (வி.பா. பக். 71)ஆ) நிரையசையில் தொடங்குவது :எ-டு : மறைது ளங்கினும் மதிது ளங்கினும் வானு மாழ்கடல் வையமும்நிறைது ளங்கினும் நிலைது ளங்கினு நிலைமை நின்வயி னிற்குமோபிறைது ளங்கிய வனைய பேரெயி றுடைய பேதையர் பெருமை – நின்,குறைது ளங்குறு புருவ வெஞ்சிலை யிடைது ளங்குற இசையுமோ! (கம்பரா.4213) (வி. பா. பக். 80)இ) எழுசீர் மத்தகோகில விருத்தம் ஒருசீர் குறைந்து, தேமா கூவிளம் -தேமா – கூவிளம் – தேமா – நெடிலீற்றுக் கூவிளங் காய் – என்ற அறுசீரடிநான்கான் அமைவது :எ-டு : ‘திங்க ளைத்தலை யாக மன்னவர் செப்பு மாமரவோர்தங்க ளிற்பகை யாகி வானவர் தான வர்க்கெதிராயெங்க ளுக்கெழு பார டங்கலு மென்று போர்புரியும்வெங்க ளத்தினி யற்கை யெங்கண்வி யந்து கூறுவதே’ (நல்லாப். கன்ன.49) (வி. பா. பக். 71)