எழுத்து வகையால் இருபத்தாறு பேதமாம் எனப்பட்ட சந்தங்களுள் ஒன்று;ஒற்றொழித்து உயிராவது உயிர்மெய் யாவது ஓரடிக்கு மூன்றாக வருவது.எ-டு : ‘வேரம் போய்மாரன் சீர்சேருங் கால்நேர்வன் யான்’(அடிதோறும் இரண்டாம்சீர் நேரசைச் சீராம்.) (வீ. சோ. 139 உரை)